வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார்- திருநாவுக்கரசர்
வேட்டி கட்டியதால் பிரதமர் மோடி தமிழன் ஆகிவிடமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.எடப்பாடி அரசு பிஜேபி அரசு போல் செயல்படுகிறது.இந்திய பிரதமரும் சீன பிரதமரும் இங்கு வந்தது மகிழ்ச்சியானது தான்.
இதனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியம் .வேட்டி சட்டை அணிவதால் மோடி தமிழராக முடியாது. குப்பைகளை எடுப்பதினால் சாதனை கிடையாது. இது மலிவான விளம்பரம் .இதனால் மக்களுக்கு பயன் இல்லை. பிரதமர் வேஷ்டி அணிவதால் மக்களுக்கு ஒன்று கிடைக்காது அந்த நிறுவனத்திற்கு வேண்டுமானால் விற்பனை அதிகரிக்கலாம் மக்களுக்கு பயனில்லை என்று தெரிவித்தார்