தென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா..!
இந்தியா , தென்னாபிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்த போது 8 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்தது.
அப்போது ஒன்பதாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடிய மகாராஜா 72 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் , உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஐடன் மார்க்ராம் வெளியேறினார். பின்னர் இறங்கிய டி ப்ரூயின் 8 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் டீன் எல்கர் நிதானமாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 48 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , குவின்டன் டி காக் இருவரும் 5 ரன்களில் வெளியேறினார். தற்போது தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.