இயல்பு நிலைக்கு திரும்பிய மாமல்லபுரம்…!
பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்றுவரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருநாட்டு தலைவர்களும் நேற்று உடன் சந்திப்பு முடிந்ததால் இன்று முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரம் வந்தனர். அன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர். இவர்களின் பாதுகாப்பு காரணமாக சுற்றுலாத் தளங்களில் பார்வையிட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை என தொழில்துறை கடந்த 8-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் இன்று சுற்றுலாத் தலங்களான கடற்கரை கோவில் , அர்ஜுன் தபசு , ஐந்து ரதம் வெண்ணை உருண்டை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்தது. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மேலும் இரு நாட்டு தலைவர்கள் வருவதால் அங்குள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. அது இன்று வழக்கம்போல திறக்கப்பட்டு உள்ளது.