இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள்…..
இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள் – ஜன.21, 1924. மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான “லெனின்” என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும்.
ஒரு செயல்வீரராக விளங்கிய. லெனின் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள். லெனின் பெரும் அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளில் மூலமாகவும் பெருமளவு செல்வாக்கு பெற்றார்.
லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.