முதல் சந்திப்பு முடிவில் மாமல்லபுரம் பற்றி தமிழில் 4 டிவிட் செய்த மோடி…!
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய சந்திப்பின் முடிவில் மோடி டிவிட் செய்த 4 தமிழ் டிவிட்கள் உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த டிவிட்கள்…..
@UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது. pic.twitter.com/74MK7ybQPN
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.
அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ. pic.twitter.com/pR5mNizJAF
— Narendra Modi (@narendramodi) October 11, 2019