திருமணமான ஒரு மாதத்தில் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த புது மாப்பிள்ளை..!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த இளைஞருக்கும் சென்ற மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த இளம் பெண்ணிற்கு தொடர்ந்து வாந்தி , மயக்கம் ஏற்பட்டதால் அவரை மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த இளம் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் மருத்துவர் சொன்ன இந்த செய்தியால் மாப்பிள்ளை வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அப்பெண் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி படிக்கும்போது கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதற்காக கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக இளம்பெண் கூறினார்.
பின்னர் இதைத்தொடர்ந்து சிவகுரு துரைராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனால் சிவகங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் கல்லூரியில் இதுபோன்று வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.