சைனீஸ் மொழியில் பிரதமர் மோடி டிவிட்..! மூன்று மொழிகளில் மோடி டிவிட்…!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வரவேற்றனர். சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சைனீஸ் மொழியில் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ” சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் ” என டிவிட் செய்துள்ளார்.

author avatar
Vidhusan