சீனாவுக்கு மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு ? சந்திப்பு வைக்க காரணம் என்ன ?
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.
இந்நிலையில், எதற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தனர் என பலர் கேள்வி எழுப்பினார். சீனாவிற்கும் மாமல்லபுரத்திற்கும் உள்ள தொடர்புகளை சில தொல்லியல் பொருட்கள் மூலம் அறியமுடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களால் உபயோகிக்க பட்ட மண்பானைகள் தமிழகத்தில் கிழக்கு கடற்கறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனர்களின் சில்லறை காசுக்கள் பற்றிய தகவல்கள் “பட்டினம்பாலை” நூலில் கூறப்படுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாக வர்த்தகம் தொடர்பாக இரு நாட்டு தூதர்களும் வந்து சென்றுள்ளனர் என தொல்லியல் ஆய்வுகள் கூறிகிறது. இவ்வாறு, சீனாவிற்கு மாமல்லபுரத்திற்கும் உள்ள தொடர்பால் தான் மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.