சச்சினுக்கு இணையான புதிய சாதனையை படைத்த மிதாலி ராஜ்..!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் புதிய மைல்கல் சாதனை செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மகளிர் கிரிக்கெட்டில் விளையாடிபி உள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனையை மிதாலி ராஜ் படைத்து உள்ளார்.
மிதாலி ராஜ் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் விளையாடி வருகிறார்.ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் 22 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி முதல் இடத்தில் இருப்பது போன்று மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 20 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.
மிதாலி ராஜ் மகளிர் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை படைத்து உள்ளார்.ஆண்கள் கிரிக்கெட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் மிதாலி ராஜ் நான்காவது இடத்தில் உள்ளார். சச்சின் (22 ஆண்டுகள், 91 நாட்கள்), சனத் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்), ஜாவேத் மியான்தத் (20 ஆண்டுகள் 272 நாட்கள்) அடுத்த இடத்தில் மிதாலி ராஜ் உள்ளார்.
சமீபத்தில் மிதாலி ராஜ் டி20 போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்த அறிவித்தார். நேற்று இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வெற்றி பெற்றது.மேலும் ஒருநாள் போட்டிகளுக்கு மிதாலி ராஜ் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.