டோனி ,சேவாக் சாதனையை இந்த போட்டியில் முறியடிப்பாரா..? ரோஹித் ..!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இன்று இரண்டாவது போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிவிரைவாக 50 சிக்சர் அடித்த பட்டியலில் தோனி முதல் இடத்திலும், சேவாக் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.தோனி டெஸ்ட் போட்டியில் 78 இன்னிங்சில் 50 சிக்சர் அடித்துள்ளார்.
சேவாக் 92 இன்னிங்சில் 50 சிக்சர் அடித்துள்ளார். ரோகித் சர்மா இதுவரை 49 இன்னிங்ஸில் விளையாடி 45 சிக்ஸர் விளாசி உள்ளார். இன்னும் ஐந்து சிக்சர் அடித்தால் அதிவிரைவாக டெஸ்ட் போட்டியில் 50 சிக்ஸர் கடந்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.
ரோகித் சர்மா முதலிடத்தை பிடிக்க என்னும் 28 இன்னிங்சில் 5 சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.