இணையத்தில் வைரலான #ரஜினி_பயத்தில்திமுக! என்ன நடந்தது கொளத்தூரில்?!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெயித்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியை ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தினர் சீரமைத்து தந்தனர். இது தொடர்பாக கொளத்தூரில் போஸ்டர்களும், ஒரு முக்கிய இடத்தில் கல்வெட்டும் வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அந்த கல்வெட்டை மர்ம நபர்கள் தகர்த்துள்ளார். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் இந்த கல்வெட்டை அகற்றியது திமுக என கூறி டிவிட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.