தன்னை ஹீரோவாக்கியவரை வீட்டு ஒனராக மாற்றி அழகுபார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பரிந்துரை செய்ததில் முக்கியமானவர் கதாசிரியர் கலைஞானம். இவர் திரைக்கதை மருத்துவர் என திரைத்துறையினர் செல்லமாக அழைப்பார்களாம்.
இவர் திரைக்கதையில் மக்கள் எதனை ரசிப்பார்கள் எது பிடிக்காது என முக்கிய ஆலோசனைகளை திரை துறையினருக்கு வழங்குவாராம். சினிமாவில் வெகு வருடங்களாக இருக்கும் இவருக்கு இதுவரை சொந்த வீடு இருந்ததில்லை.
இந்த விஷயம் கலைஞானம் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிக்கு தெரியவந்தது. இது தெரிந்ததும், அவருக்கு வீடு வழங்க திட்டமிட்டு, தர்பார் ஷூட்டிங் செல்லும் முன்பு செக் போட்டு உதவியாளரிடம் கொடுத்து, கலைஞானதிற்கு வீடு கட்டி கொடுக்க சொல்லியுள்ளார்.
அதன் பின்னர், கலைஞானத்திற்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தர்பார் ஷூட்டிங் முடிந்ததும், கலைஞானம் வீட்டிற்க்கு சென்ற ரஜினி அவருக்கு சாயிபாபா படத்தை பரிசாக அளித்துவிட்டு வந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025