இலங்கை அணியை வாஷ் அவுட் செய்து தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா..!
இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதில் இன்று கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் புலம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரராக யசோதா மெண்டிஸ் , சமாரி இருவரும் களமிறங்கினர். ஆனால் யசோதா மெண்டிஸ் ஆட்டம் தொடக்கத்திலேயே 3 ரன்னில் வெளியேற பின்னர் இறங்கிய ஹர்ஷிதா மாதவி நிதானமாக விளையாடி 24 ரன்னுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தொடக்க வீரரான சமாரி 124 பந்தில் சதம் அடித்து 103 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரி அடங்கும். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் 195 ரன்கள் எடுத்தனர்.
196இலக்குடன்ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரேச்சல் ,
அலிஸா களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய ரேச்சல் அரைசதம் அடித்து 63 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் கேப்டன் மெக் லானிங் , அலிஸா இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடிய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
அலிஸா 76 பந்தில் 112* ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரி 2 சிக்ஸர் அடங்கும்.இறுதியாக ஆஸ்திரேலிய அணி 26.5 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய டி 20 தொடரில் ஆஸ்திரேலியா 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப் பற்றியது. இதன் மூலம் இரண்டு தொடர்களிலும் ஒரு போட்டியில் கூட இலங்கை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.