உள்வாங்கிய கடல் நீர்! பீதியில் ராமநாதபுர மாவட்ட மக்கள்!
ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள கடலோர ஊர்களில் கடல் நீர் உள்வாங்கியது இதனால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்தனர். இது எதனால் எனவும் குழப்பமடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் கடல்நீரானது சுமார் 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி தரை தட்டியது. இதனால் பல படகுகள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.