கூட்டணிக்குள்ளேயே குளறுபடி! சிவசேனாவிடம் சிக்கி திணறி வரும் பாஜக!?

Default Image

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இம்மாதம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இம்மாதம் 24ஆம் தேதியே இந்த சட்டமன்ற தேர்தலும் முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.
இதில் பாரதிய ஜனதா கட்சியானது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் கூட்டணியை பங்கிட்டுள்ளது நமக்கு ஏற்கனவே தெரியும். இதில், மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், பாஜகவிற்கு 150 தொகுதிகளும், சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் என தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு செய்யப்பட்டாலும் கூட்டணி கட்சியான சிவசேனாவின் நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும் பாஜகவை திணறடித்து வருகின்றன. இரு பிரதான கட்சிகளும் தங்கள் பெரும்பான்மையை காட்ட முயற்சித்து முதல்வர் நாற்காலியில் அமர காய் நகர்த்தி வருகின்றன.
இதில் பாஜகவும் தனி பெரும்பான்மையை காட்டி, ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது. சிவசேனாவும் தங்களது பெரும்பான்மையை காட்டி துணை முதல்வர் நாற்காலியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவை உக்கார வைத்து, அமைச்சரவையில் தங்களது பலத்தை காட்டவும் சிவசேனா கட்சி தீவிரமாக வேலைகளை செய்துவருகிறது. வாய்ப்பு கிடைத்தால் மஹாராஷ்டிராவில் உள்ள வோர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்யா தாக்கரேவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கவும் கட்சிக்காரர்கள் முயற்சிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ஆனால் உத்தவ் தாக்கரே இதனை மறுத்துள்ளார். முதல்வராகும் நேரம் இன்னும் ஆதித்யா தாக்கரேவுக்கு வரவில்லை. என கருத்து தெரிவித்துள்ளார். மேலும். சிவசேனா கட்சி தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவுத், தேர்தல் பிரச்சார மேடையில், ‘ முதல்வர் நாற்காலியில் விரைவில் சிவசேனா அமரும். நாங்கள் தர்மத்தை கடைபிடிப்பதால் தற்போது அமைதியை கடைபிடித்து வருகிறோம். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருந்த ஒரே காரணத்தால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என கூறினார்.
மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்போது அதில் பதிக்கும் முதல் கல் சிவசேனாவுடையது எனவும் அப்பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். கூட்டணி என வெளியில் தெரிவித்து கொண்டாலும், சிவசேனாவின் தேர்தல் நகர்வுகள் பாஜக கட்சி தலைமையை குழப்பமடைய வைத்துள்ளதாக அரசியல் பிரமுகர்கள் பேசி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்