விரைவில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு அதிவிரைவான உளவு விமானம்!

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் நிலவி வந்த காலக்கட்டத்தில் அமெரிக்க விமானப் படையில் எஸ்.ஆர். 71 பிளாக்பேர்டு என்கிற அதிவிரைவான உளவு விமானம் பயன்படுத்தப்பட்டது. மணிக்கு இரண்டாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுள்ள இந்த விமானத்தை லாக்கீட் மார்ட்டின் என்னும் நிறுவனம் தயாரித்தது. இவ்வகை உளவு விமானங்கள் அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு 30ஆண்டுகள் ஆகிவிட்டன.
Related image
இந்நிலையில் எஸ்.ஆர். 71பிளாக்பேர்டு விமானத்தில் ஒருசில புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி எஸ்.ஆர்.72 பிளாக்பேர்டு என்கிற விமானத்தை லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவ்வகை விமானங்கள் 2030ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment