கர்நாடகா மீது  கோவா மாநில நீர்வள அமைச்சர் பகிரங்க  குற்றச்சாட்டு!

Default Image
கர்நாடகா மீது  கோவா மாநில நீர்வள அமைச்சர் பகிரங்க  குற்றச்சாட்டு.

மகாதாயி ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்டிர மாநிலங்களிடையே பிரச்சனை உள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்டிர அரசுகள் இந்நதியின் குறுக்கே அமைக்க திட்டமிட்டுள்ள அணைகளுக்கு கோவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Image result for goa water source minister vinoth
இது தொடர்பாக டெல்லியில் மகாதாயி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், கோவா மாநிலத்தின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேட்டியளித்த கோவா நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், கர்நாடக அரசு திட்டமிட்டு சாட்சியங்களை தயாரித்து அழைத்து வருவதாகவும், அரசுக்கு ஆதரவாக தீர்ப்பாயத்தில் ஆஜராகும் நபர்களுக்கு வாய்தா ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்