காதல் திருமணம் செய்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!
காதல் திருமணம் செய்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் அதிரடி .
வடமாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் கிராமத் தலைவர்கள் கொடூரமான தண்டனைகளையும், பல்வேறு நூதன தண்டனைகளை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டப்பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த கூறியதுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டப் பஞ்சாயத்துகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கட்டப்பஞ்சாயத்துகளையும், அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் மத்திய அரசு தடுக்காவிட்டால், நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்த தலைமை நீதிபதி அமர்வு, காதல் திருமணம் செய்தவர்களின் மீதான தாக்குதலையும் தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்தது.
காதலித்து திருமணம் செய்வது என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் விருப்பம் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், காதல் திருமணம் செய்பவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ..