முதலிடத்தை தட்டி சென்ற முகன்! மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன விருது?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மூன்றாவது சீசனை நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. மூன்று சீசனையும் உலகநாயகன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகன், லொஸ்லியா, சாண்டி, வனிதா, ஆனந்த் வைத்தியநாதன், மதுமிதா, ஷெரின், சாக்ஷி அகர்வால்,ரேஷ்மா, சரவணன், பாத்திமா பாபு ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில்வாராவாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டார். மதுமிதா, சரவணன், கவின் போன்றோர் இடையில் சில காரணங்களால் போட்டியில் தொடரவில்லை.
கடைசியாக சாண்டி, முகன், லாஸ்லியா, ஷெரின் என நால்வர் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில், ஷெரின் நான்காவது இடத்தையும், லாஸ்லியா மூன்றாவது இடத்தையும், சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். முதல் இடத்தை பிடித்து பிக் பாஸ் மூன்றாவது சீசன் வெற்றியாளராக முகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதில் கேம் சேஞ்சேர் எனும் விருது கவினுக்கும், டிசிப்ளின் எனும் நேர்மையாக விளையாடியதற்கான விருது இயக்குனர் சேரனுக்கும், சிறந்த ஆல்ரவுண்டர் போட்டியாளர் விருது தர்ஷனுக்கும், நட்போடு விளையாடியதற்கான விருது ஷெரினுக்கும், தைரியமான போட்டியாளருக்கான ( GUTS AWARD ) விருது வனிதாவிற்கும் வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025