அசுரனை அடுத்து சூர்யாவை இயக்க உள்ளாரா வெற்றிமாறன்?!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திறமையான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். தான் இயக்கிய 5 படங்களிலும் தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். கடைசியாக வெளியாகியுள்ள அசுரன் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன், சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது, இது உண்மைதானா, இல்லை வெறும் வதந்தியா என அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.