சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது !காணும் பொங்கலையொட்டி சுற்றுலாதளங்களில் மக்கள் கொண்டாட்டம்…..
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர். பகவதி அம்மன் கோவிலிலும் தரிசனம் செய்தனர்.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலைக்கு செல்ல காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவிடாமல் படகுசேவை நடைபெறுகிறது. சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
காணும்பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணைப்பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 15 ஏக்கர பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் படகுசவாரி, சிறுவர் மற்றும் பெரியவர்கள் சறுக்கி விளையாடுதல் ஊஞசல், செயற்கை நீரூற்றுகள், உள்ளிட்டவை உள்ளன.
ஈரோடு மட்டுமன்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்திருந்தனர்.