நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை  ஏற்றுக்கொள்ள முடியாது- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Default Image

நீட் தேர்வை கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு கொண்டுவருவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சிலர் மீது தேச துரோக வழக்கு போட்டிருப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .இது சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய அரசு கொண்டிருப்பதை காட்டுகிறது. அதுமட்டுமின்றி மரியாதைக்குரிய பாரத பிரதமர் மோடியும் சென்று கொண்டிருக்கிறார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் ,அறிஞர்கள், எழுத்தாளர்கள் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நீட் தேர்வை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் கேம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளை இதற்கு கீழ் கொண்டுவருவது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் சென்னை வருவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இதனால் தென்னிந்தியாவை பெருமைப்படும்.
ஆனால் அவர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் வைப்பது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது .புதுச்சேரியை பொருத்தவரை டிஜிட்டல் பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்