அதிகரிக்கும் திரையரங்குகள்! வசூல் வேட்டையை ஆரம்பித்த தனுஷின் அசுரன்!
தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் அசுரன். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு வரவேற்பு பலமாக இருந்தது.
எதிர்பார்த்தது போல படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் உள்ள 450 தியேட்டர்களில் காட்சி அதிகட்படுத்த பட்டுள்ளதாம். பல திரையரங்குகளில் காலை 8 மணி காட்சிகள் திரையிடப்பட்டதாம். இதனால் வார இறுதி நாளான இன்று வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.