மூன்று விதமான போட்டிகளில் அதிக சிக்ஸர் விளாசிய ரோஹித் முதலிடம் ..!
தென்னாபிரிக்கா , இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.பின்னர் இறங்கிய தென்னாபிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
நேற்று இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 395 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரோஹித் 127 ரன்கள் அடித்தார்.அதில் 10 பவுண்டரி , 7 சிக்ஸர் அடங்கும்.இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் ரோஹித் 13 சிக்ஸர் விளாசி உள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா மூன்று விதமான போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். தற்போது டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர் அடித்து மூன்று விதமான போட்டிகளில் ரோஹித் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 13 சிக்சர்கள்
ஒருநாள் போட்டிகளில் 16 சிக்சர்கள்
டி20 போட்டியில் 10 சிக்ஸர் விளாசி முதலிடத்தில் உள்ளார்.