அரசை கேலி செய்யாமல் களத்தில் இறங்கி உதவுங்கள் : கமலஹாசன்
நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார்.
தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.
இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.
நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, கேலியோ இன்றி உதவுங்கள்.ஆபத்துக்கு பாவம் இல்லை’. என்று கருத்தை பதிவிட்டுள்ளார்.