நாங்குநேரி தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை – அமைச்சர் தங்கமணி
நாங்குநேரி தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.இதன் பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், இந்த தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை .முதலமைச்சர் பழனிசாமி வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் பணபலம் படைத்த வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது . அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.