இசையமைக்க விடாமல் தொந்தரவு தருகிறார்கள் ! இளையராஜாவின் உதவியாளர் போலீசில் புகார் !

சென்னையில் வடபழனியில் எல்.வி பிரசத்திற்கு சொந்தமான பிரசாத் ஸ்டூடியோ 1 ஐ இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக அந்த இடத்தில் வைத்து இசை அமைத்து வருகிறார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி பிரசாத் ஸ்டூடியோ தியேட்டரை ஆக்ரமித்ததாக இளையராஜாவின் உதவியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநர் மற்றும் எல்.வி பிரசாத்தின் பேரனுமான சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு அதில் 20 கணினிகளை வைத்து இசை அமைக்க விடாமல் இடையூறு செய்வதாக இளையராஜாவின் உதவியாளர் கஃபார் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோ இயக்குநர் சாய் பிரசாத் மற்றும் பாஸ்கர் ,சிவராமன் உள்ளிட்ட ஊழியர்கள் மீதும் தபால் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025