அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது – சத்யபிரத சாகு
அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்தில் 29லட்சத்து 50ஆயிரம் 633 பேர் பெயர் மற்றும் முகவரி சரி பார்த்துள்ளனர். 1லட்சத்து 65 ஆயிரம் பேர் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்துள்ளனர்.
வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் திருத்தம் செய்ய வருகிற 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.