டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் -தமிழக அரசு அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.