இன்று பூஜையுடன் துவங்குகிறது தளபதி 64!

Default Image

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தளபதி விஜய் பிகில் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் நடிகர் விஜய் பேராசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் இன்று பூஜையுடன் துவங்கவுள்ளது. இந்த திரைப்படம், 2020 மே மாதம் திரையிடப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்