PAKvsSL :சொந்த மண்ணில் இலங்கையை வதம் செய்து கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் ..!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்க வீரர்களாக அவிஷ்கா, குணதிலக இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே அவிஷ்கா 4 ரன்களில் வெளியேற இதைத் தொடர்ந்து கேப்டன் திரிமன்னே களமிறங்கினார்.
நிதானமாக விளையாடிய திரிமன்னே 4 பவுண்டரி என 36 ரன்களுடன் விக்கெட்டை பறி கொடுத்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியில் குணதிலக மட்டும் நிலைத்து நின்று சதம் விளாசி 133 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 297 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தானில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார். பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.பின்னர் 298 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , ஆபிட் அலி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடி இருவருமே அரைசதம் அடித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஆபிட் அலி 67 பந்தில் 10 பவுண்டரி விளாசி 74 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து களமிறங்கிய பாபர் ஆசாம் 31 ரன்னில் வெளியேற நிதானமாக விளையாடிய ஃபக்கர் ஜமான் 91 பந்தில் 76 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் மத்தியில் இறங்கிய ஹரிஸ் சோஹைல் அரைசதம் அடிக்க இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 299 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.முதல் போட்டி டிராவில் முடிந்தது எனப்து குறிப்பிடதக்கது.