போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிவீரா ?
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள போலிக் அமிலம் நிறைந்த உணவுவகைகளை நாம் உணவில் சேர்த்து வைப்பது மிகவும் நல்லது.இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கும் வகிக்கிறது.இந்த பதிப்பில் போலிக் அமிலங்கள் நிறைந்த உணவு வகைகள் என்னென்ன என்பதை பற்றி படித்தறியலாம்.
முட்டை:
முட்டையில் புரத சத்தும் மட்டுமில்லாமல் பல வகையான சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இந்நிலையில் இதனை நாம் தினமும் உணவில் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
சிட்ரஸ் உணவுகள் :
ஆரஞ்சு ,எலுமிச்சை , கொய்யா முதலிய உணவுகளில் சிட்ரஸ் அதிகம் உணவுகள் உணவுகளாகும். இந்த வகையான சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.இதில் போலிக் அமிலம் நிறைந்து இருக்கிறது.
கீரைகள் :
கீரையில் அதிக அளவு போலிக் அமிலம் இருப்பதால் அது நமது உடலில் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்நிலையில் கீரையில் இருக்கும் போலிக் அமிலம் முடி வளர்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது.
ப்ரோக்கோலி :
ப்ரோக்கோலியில் போலிக் அமிலம் ,மக்னீசியம் , வைட்டமின் சி முதலிய சத்துக்கள் அதிகம் காணபடுகிறது. இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் குணப்படுத்தும்.
பருப்பு :
பருப்பு வகைகளில் அதிகஅளவு போலிக் அமிலம் இருகிறது.இதையும் நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.