இந்தியாவிலேயே அதிமுக தான் பணத்தை அதிகளவில் செலவழித்த கட்சி – கே.எஸ்.அழகிரி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவிலேயே அதிமுக தான் பணத்தை அதிகளவில் செலவழித்த கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செல்வந்தவர்கள் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து தவறு . இந்தியாவிலேயே அதிமுக தான் பணத்தை அதிகளவில் செலவழித்த கட்சி என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா எத்தனை தொகுதியில் நின்றுள்ளார் என்றும் பட்டினம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் எதற்கு ராயபுரம் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.காங்கிரஸ் எளிமையான கட்சி, அதற்கு பண பலம் கிடையாது என்றும், அதிமுகவினர் தான் பண பலத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.