தனுஷ் படத்தில் இருந்து பிரிந்த வெற்றிக்கூட்டணி! வருத்தத்தில் ரசிகர்கள்!
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். அதில் முதல்படமாக, தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இதற்கான கதை விவாதம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அடுத்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் யுவன் இல்லையாம். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தான் இசையைமைத்து வருகிறாராம். மேலும் இந்த படத்துக்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம் சீன் ரோல்டன்.