தனது 50ஆம் பிறந்தநாளை கொண்டாடும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு வண்டி..!
மதுரையிலிருந்து சென்னைக்கு தினந்தோறும் இயங்கி வரும் வண்டி பாண்டியன் விரைவு ரயில். இந்த வண்டி, தினந்தோறும் 700க்கும் மேற்பட்ட பயணிகளை மதுரையில் இருந்து சென்னை வரை அழைத்துச் செல்கிறது.
தற்பொழுது இந்த ரயிலின் சேவை தொடங்கி 50ஆம் ஆண்டு ஆகிய நிலையில், அதனை சிறப்பிக்கும் விதமாக ரயிலில் பூக்களால் அலங்கரித்து, ரயில் என்ஜினில் ஐம்பதாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற போர்டும் வைத்தனர். மேலும், மாணவ மாணவியர்கள் மற்றும் ரயிலில் பயணிப்போர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மிகப்பெரிய அளவிலான கேக் ஒன்றை தயார் செய்து அதனை ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.