INDvsSA:மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்..!
இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி இன்று விசாகப் பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள்.
இதில் இந்திய அணி 59.1 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 115* ,அகர்வால் 84 * ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.