நீட் தேர்வு மோசடி! சரணடைந்த இர்ஃபான் தந்தை ஒரு போலி மருத்துவர்! இரண்டு கிளினிக் நடத்தி வந்ததும் அம்பலம்!

Default Image

நீட் தேர்வு மோசடியியில் முதன் முதலாக, தேனி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த உதித் சூர்யா எனும் மாணவன் கைது செய்யப்பட்டார். மேலும், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை  நடைபெற்று வருகிறது.
மேலும் வெங்கடேசனின்நண்பரான சரவணகுமாரும் தன் மகன் பிரவீனை நீட் தேர்வு மோசடியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்களும் சிபிசிஐடி விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில், இடைத்தரகர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர் நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட இர்ஃபான் எனும் மாணவன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது,  இர்பான் தந்தை ஷபி ஒரு போலி மருத்துவர் எனபதும், அவர் பாதியிலேயே மருத்துவப்படிப்பை நிறுத்திவிட்டு இப்பொது வேலூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் இரண்டு கிளினிக் வைத்து நடத்தி வந்ததும் சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்