ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் ராணா? இவருக்கு என்னாச்சி! இது தான் காரணமா?
நடிகர் ராணா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ராணா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது வதந்தி என ராணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ராணா மிகவும் ஒல்லியாக இருக்கிற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், ராணாவுக்கு என்னாச்சி? ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, ராணா விரதபர்வம் 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ராணா உடல் எடையை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.