தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி! விஜய் சேதுபதி ட்வீட்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். விஜய், அஜித் போன்ற முன்னை போலவே, இவருக்கும் ரசிகர்கள் பாட்டாளம் உள்ளது. இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டுமில்லாது, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் இவர், தற்போது தளபதி 64 படத்தில், நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மேலும் இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குனர் யோகேஷ் மற்றும் லலித்குமாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Happy to associated with #ThalapathyVijay sir & special thanks to #Lalithkumar & @Dir_Lokesh ☺️#Thalapathy64 https://t.co/n3YdBEydvR
— VijaySethupathi (@VijaySethuOffl) September 30, 2019