4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் பேசுகையில்,4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.தீபாவளிக்கு, 4265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள், சென்னையில் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வர 4,627 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.