நீட் ஆள்மாறாட்டம் ! இர்பானுக்கு 9-ஆம் தேதி வரை காவல் – நீதிமன்றம் உத்தரவு
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இர்பான், சேலத்தில் சரணடைந்தார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவன் இர்பான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து படிப்பதாக புகார் எழுந்தது.மேலும் இர்பானின் தந்தை கைது செய்யப்பட்டார்.மாணவரான இர்பான் மொரிசியஸ் தப்பி சென்றதாக கூறப்பட்டது.பின் சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில், மாணவர் இர்பான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.பின்னர் இர்பான் சரணடைந்த நிலையில் இர்பானுக்கு 9ம்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது சேலம் நீதிமன்றம்.