பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சனின் உருக்கமான பதிவு!
இலங்கையை சேர்ந்த இளைஞரான தர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அணைத்து விளையாட்டுகளிலும் மிகவும் கடினமாக விளையாடினார்.
தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனி குழுக்களும் துவங்கியுள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தர்சனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியியற்றியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது வேறு ஆனால், தெரியாதவர்களிடம் இருந்து இத்தனை அன்பு கிடைப்பது பெரிய விஷயம் இதற்கெல்லாம் ரசிகர்ளுக்குத் நன்றி என பதிவிட்டுள்ளார்.