சட்டப்பேரவைத் தேர்தலில் குதித்த விளையாட்டு வீரர்கள்..!
வருகின்ற 25-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தளுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் விளையாட்டு வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். பபிதா போகத், யோகேஸ்வர் தத் மற்றும் சந்தீப் சிங் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தாத்ரி தொகுதியிலும் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் பிஹோவா தொகுதியிலும் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பரோடா தொகுதியிலும் களமிறங்க உள்ளனர்.
பபிதா போகத் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதியும், சந்தீப் சிங் மற்றும் யோகேஷ்வர் தத் இருவரும் கடந்த 27-ம் தேதி பாஜகவில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது