பீகார் வெள்ளத்தில் போட்டோ ஷூட்..! மாணவியால் சர்ச்சை ..!
பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த கனமழையால் 29 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரியில் அதிதி சிங் என்பவர் படித்து வருகிறார்.இவர் அங்கு உள்ள வெள்ள நீரில் பல கோணங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
இது பீகார் மக்களின் அவல நிலையை கிண்டல் செய்வது போல் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ ஷூட் எடுத்த சவுரவ் அனுராஜ் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இந்த போட்டோ சூட்டின் நோக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்கவே ஏனென்றால் மற்ற மாநிலங்களில் வெள்ளம் வந்தால் எல்லா மக்களும் முன்வந்து உதவி செய்கின்றனர்.
பிற மாநில மக்களுக்கு இங்கு உள்ள நிலைமை சரியாக போய் சேரவில்லை. இங்கு உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அதை பார்த்துவிட்டு வருத்தத்தை மட்டுமே பதிவு செய்வீர்கள். இங்கு உள்ள நிலைமையை பார்க்கவே இந்த போட்டோ ஷூட் எடுத்தேன் என கூறியுள்ளார்.