விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது – மயில்சாமி அண்ணாதுரை
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது, இனி அதை பயன்படுத்த முடியாது. முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் இயங்கிவருகிறது.
இதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் அடுத்தக்கட்ட முயற்சியில் இந்தியா வெற்றி பெறும்.