இந்திரதேவன் பெற்ற சாபதிற்கும் பெண்களின் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம் !
இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.அந்தவகையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மாதம் மாதம் அச்சுறுத்தும் மாதவிடாய் பிரச்சனைக்கும் இந்திரதேவனின் சாபத்திற்கு சம்பந்தம் இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது இருப்பினும் என்ன சம்பந்தம் என்பதை இந்த பதிப்பில் படித்தறியலாம்.
இந்திரன் சாபம் பெற்ற கதை :
குரு பிரகஸ்பதி இந்திரன் மீது ஒரு முறை கடுமையாக கோபப்பட்டார். இதனை சாதகமாக எடுத்து கொண்ட அரக்கர்கள் இந்திரா லோகத்தை கடுமையாக தாக்கினார்கள். இதனால் இந்திரா தேவர் அவரது ராஜ்ஜியத்தை விட்டு ஓடிவிட்டார்.
இதற்கு தீர்வு கூறுமாறு பிரம்மனிடம் முறையிட்டார் இந்திரதேவன் .அதற்கு பிரம்மன் உனக்கு உன்னுடைய ராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமானால் நீ ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.அப்படி நீ செய்த பணிவிடையால் அவருடைய மனம் குளிர்ந்து போனால் மீண்டும் உன்னுடைய ராஜ்ஜியம் உனக்கு கிடைக்கும் என்று கூறினார்.
எனவே இந்திரனும் முனிவருக்கு பணிவிடை செய்த தொடங்கினான். இந்நிலையில் இந்திரன் பணிவிடை செய்யும் முனிவரின் தாய் அசுரர் குலத்தை சேர்ந்தவர். இதனால் முனிவரும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அசுரர்களுடன் நெருக்கமாக இருந்த முனிவரை பார்த்த இந்திர தேவன் அவரை கொலை செய்தான்.குருவை கொலை செய்வது மிக பெரிய குற்றமாகும்.இதனால் இதில் இருந்து தப்பிக்க இந்திரன் பூவில் மறைந்து விஷ்ணுவை வணங்கி வந்தார். இந்திரனின் வேண்டுதலை ஏற்ற விஷ்ணு இந்திரனை காப்பாற்றுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இந்திரன் தன்னுடைய சுமைகளை மரம் ,நீர் ,பூமி ,பெண் ஆகியவற்றுடன் வகுத்து கொள்வதாக கூறியுள்ளார்.
சாபம் :
மரம் :
சாபத்தில் நான்கில் ஒரு பங்கு மரத்திற்கு வழங்க பட்டது. அதில் மரம் வாடினாலும் மீண்டும் உயிர் பெறும் என்ற வரம் அளிக்கப்பட்டது.
நீர் :
சாபத்தில் நான்கில் இரண்டாம் பங்கு நீருக்கு அளிக்க பட்டது.அதில் நீர் மற்ற பொருட்களை சுத்தம் செய்யவும் ,புனித மடையவும் உதவும் என்று கூறப்பட்டது.
பூமி :
நான்கில் மூன்றாம் பங்கு நீருக்கு வழங்க பட்டது.அதில் பூமி நீரின்றி வறண்டு போனாலும் மீண்டும் தானாக புத்துயிர் பெரும் என்று கூறப்பட்டது.
பெண் :
இதில் நான்காம் பங்கு பெண்களுக்கு வழங்க பட்டது. இதனால் பெண்கள் மதிக்க படுவார்கள் என்ற வரமும் வழங்க பட்டது.