உலக தடகள போட்டி:தகுதி சுற்றில் வெளியேறிய தருண் அய்யாசாமி..!
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதி சுற்றில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி கலந்து கொண்டார்.
400 மீட்டர் இலக்கை தருண் அய்யாசாமி 50.55 வினாடிகளில் கடந்து முதல் சுற்றிலே வெளியேறினர். கடந்த மார்ச் மாதம் பெடரேஷன் கோப்பை போட்டியில் அருண் அய்யாசாமி 48.80 வினாடிகளில் இலக்கை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.