இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்

Default Image

நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கான  வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தது.

அதன்படி  23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால் அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சிகளின்  வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்