கபடி பயிற்சியாளராக களமிறங்கும் தமன்னா!
நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் பெட்ரோமாக்ஸ் என படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சம்பத் நந்தி இயக்கம் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில், நடிகை தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை தமன்னா, ‘விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் பயிற்சியாளராக நடிப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றும், அதுமாதிரி ஒரு கதாபாத்திரம் கிடைப்பதை நினைக்கிறன். இந்த கதாபாத்திரம் எனது மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.’ என்றும் கூறியுள்ளார்.