அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம்!அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை ……

Default Image

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அமெரிக்கர்கள்  அனைவரும்  ரஷ்யாவிற்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது .
அமெரிக்க வெளியுறவுத்துறை அந்நாட்டில் இருந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணம் செல்பவர்களுக்கு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யாவில் உள்நாட்டு அமைதி குலைந்துள்ளதாகவும், அங்குள்ள தீவிரவாதிகள் அமெரிக்கர்களைக் குறிவைத்துத் தாக்கும் அபாயமுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் ரஷ்யாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்குச் செல்வதற்காக ஏற்கெனவே திட்டமிட்டுள்ளவர்களும் தங்கள் பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்